Tuesday, June 21, 2016

படிப்பது எப்படி ?(How to Study)

இந்த பகுதியை ஆரம்பிக்கும் முன் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..
படிப்பு உங்களுடைய அறிவை மேம்படுத்துவதற்கு தவிர தேர்வில் மதிப்பெண்களுக்காக அல்ல..
நிறைய மாணவர்களுக்கு எப்படி என்றே தெரியவில்லை? அதனால் தான் அவர்களது போக்கு வேற மாதிரி செல்கிறது.. அது ஒன்று பிரச்சனை இல்ல ஒரு தடவ அடிப்பட்டுடா அவங்களே தெரிஞ்சுக்கு வாங்க.. இப்ப ஒரு 10 டிப்ஸ் ஐ  மட்டும் follow பண்ண ஆரம்பிங்க போக போக நிறைய கத்துதரேன் சரியா...?
  1. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் படியுங்கள் அது உங்களுக்கு பிடித்த எந்த நேரமானலும் சரி ஆனால் நன்றாக மனதூன்றி படியுங்கள்,.விடுமுறை நாட்களில் இன்னும் 2 மணி நேரம் கூடுதலாக படியுங்கள்.
  2. monthly,weekly,daily என காலத்தை பிரித்து படியுங்கள்.
  3. தினமும் தூங்கப்போவதற்க்கு முன்பு படித்ததை நினைத்து பாருங்கள். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனே புக்கை எடுத்து புரட்டி பார்கவும். இது உங்கள் நினைவாற்றலை அதிகப்படுத்தும்.
  4. கையெழுத்து பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று. எழுதி எழுதி பழக தான் தேர்வில் வேகமாகவும் அழகாகவும் எழுத வரும். நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் அதே பேனாவையே தேர்விற்கும் பயன்படுத்த வேண்டும்.
  5. வெறும் மதிபெண்களுக்காக படிக்காதீர்கள். அப்படி பட்ட படிப்பு உங்கள் வாழ்க்கைக்கு உதவாது.
  6. பள்ளி/கல்லூரி வைக்கும் தேர்வுகளை பயன்படுத்தி நன்றாக எழுதுங்கள். இது உங்களிடம் உள்ள குறைகளை கண்டறிய உதவும்.
  7. நீங்கள் படிக்கும் பொழுது சிறு சிறு குறிப்புகளாக எடுத்து படியுங்கள்.முக்கியமான HEADING SUBHEADING களை குறிப்பெடுங்கள். இந்த குறிப்புகளை அவ்வபோது எடுத்து பாருங்கள். தேர்விற்க்கு மிகவும் உதவியாய் இருக்கும்.
  8. படங்கள்(DIAGRAMS),சமன்பாடுகள்(EQUATIONS) வரைந்தும், எழுதியும் பாருங்கள்.
  9. வினா வங்கிகளில் (QUESTION BANK) முக்கியமான மற்றும் அடிக்கடி கேட்ககூடிய கேள்விகளுக்கு முக்கியதுவம் கொடுத்து படியுங்கள்.
  10. உங்கள் புத்தகத்தில் ஒவ்வொரு UNIT ம் பிறகு உள்ள கேள்விகளை பதில் படியுங்கள்.
  11. உங்களுக்கு தனியாக படிக்க நினைத்தால் தனியாகவே படியுங்கள், இல்லையென்றால் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டு படியுங்கள்,ஆனால் நீங்கள் படிக்க் நினைத்ததை சரியா படித்து முடித்திடுங்கள
இந்த 11 போதும் உங்களுக்கு... இத சரியா FOLLOW பண்ணிணாலே போதும் எந்த வித டென்சன் இல்லாம இருக்கலாம் தேர்வுலயும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கமுடியும்.

0 comments:

Post a Comment

About

Powered by Blogger.

Feeds

Contributors

Popular Posts