Friday, July 22, 2016

ரெஸியூம் தயாரிப்பது எப்படி.....? - How to prepare Resume....?

ரெஸ்யூமின் நோக்கம் விண்ணப்பிக்கும் வேலைக்கு நீங்கள் முழு தகுதியானவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதே. எனவே சமயோசிதத்துடன் ரெஸ்யூம் எழுதுவது அவசியம்.




ரெஸ்யூமின் தலைப்பில் உங்கள் பெயர் மற்றும் அதற்கு கீழே உங்கள் சரியான முகவரி, கைபேசி எண், இ-மெயில் முகவரி போன்ற தகவல்களை தர வேண்டும். அதன் கீழே உங்களை பற்றியும் தொழில் தொடர்பான உங்கள் குறிக்கோள்கள் பற்றியும் இரண்டு, மூன்று வரிகளில் எழுதலாம். உங்களைப் பற்றி எழுதும்போது உங்கள் சிறப்பு திறன்கள், பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றி குறிப்பிடலாம். வேலை முன்அனுபவம் இல்லாத பட்சத்தில் உங்கள் கல்வித் தகுதிகளை முதலில் தரலாம். இதில் சமீபத்திய தகுதியை முதலில் தர வேண்டும். பட்டத்தின் தலைப்பு, கல்லூரி, பல்கலைக்கழகத்தின் பெயர், படித்த வருடம், மதிப்பெண் சதவிகிதம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும். கல்லூரியில் நீங்கள் முதல் மதிப்பெண்ணோ, ரேங்க்கோ பெற்றிருந்தால் அதை அடிக்கோடிட்டு காட்டலாம்.

வேலை முன்அனுபவம் இருக்கும் பட்சத்தில் அதை கல்வித் தகுதிக்கு முன் தரலாம். வேலை முன் அனுபவத்தை இரண்டு விதமாக பட்டியலிடலாம்:

1. கால அடிப்படை (chronoligical order): வெவ்வேறு காலகட்டத்தில் நீங்கள் பணிபுரிந்த நிறுவனம் மற்றும் பதவி, மேலும் அங்கு நீங்கள் ஆற்றிய முக்கிய கடமைகள்.

2. திறன்கள் அடிப்படை (functional order): வேலைத் திறன்கள் சார்ந்து நீங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் பெற்ற அனுபவங்கள். ஒரே நேரத்தில் பல பகுதிநேர வேலைகள் செய்திருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது.

வேலை முன்அனுபவம், கல்வித் தகுதிக்குப் பிறகு நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை தொடர்பான உங்கள் தனித்திறன்கள், பெற்ற அனுபவங்களை குறிப்பிடலாம். வேலை தொடர்பான அனுபவங்கள் என்பது நீங்கள் சென்ற பயிற்சி வகுப்புகள், கல்லூரி மற்றும் சம்மர் புராஜெக்ட்கள், உங்கள் துறை சார்ந்த குழுக்களில் உங்கள் பங்கேற்பு போன்றவற்றைக் குறிக்கும்.

இவற்றைத் தகுந்த தலைப்பிட்டு பட்டியலிட வேண்டும். இவற்றைச் சுருக்கமான வாக்கியங்களாகவோ, புல்லட் புள்ளிகளாகவோ தரலாம். நற்சான்று தரும் நபர்களின் (References) தகவல்களை கேட்கப்பட்டிருந்தால் மட்டுமே தர வேண்டும்.

FOR CV WRITING SERVICES @ www.adsolutionsngt.in


0 comments:

Post a Comment

About

Powered by Blogger.

Feeds

Contributors

Popular Posts